கொரோனா... பாதிப்பை ஏற்படுத்துமா என்.பி.1.8.1 ?
கொரோனா தொற்று மீண்டும் பரவத் துவங்கியுள்ள நிலையில்,
இந்தியாவில் மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பாதிப்பு
அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த
சில வாரங்களாக, பி.ஏ.2 மற்றும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்றுகள் அதிகரித்து
வந்த சூழலில், தற்போது என்.பி.1.8.1 என்ற வகை வேகமாக பரவி வருவதாக மருத்துவ
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒமைக்ரான் ஜே.என்.1 வகையின் வழிதோன்றலாக கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த வகை தொற்றால், ஒமைக்ரானைவிட ஆபத்து குறைவாகவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொண்டை
வலி, சோர்வு, லேசான இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, தலைவலி, குமட்டல்,
பசியின்மை, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள் இந்த வகை தொற்றின்
அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
இது, பெரியளவில் இல்லாமல், ஐந்து நாட்களில் குணமாகும் அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.