முதுகுவலியை போக்க உதவும் யோகாசனங்கள் சில!

முதுகுவலிக்கான பொதுவான காரணங்கள் நிலை மாறி அமர்தல் (posture change), நீண்ட நேரம் வாகனம் ஓட்டுதல், முதுகில் காயம், வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சியின்மை ஆகியன ஆகும்.

முதுகு வலியை குணப்படுத்தும் எளிய வழியாக யோகா உள்ளது. யோகா நீட்டித்தல், நெகிழ்வுத்தன்மை மூலம் உடலை அதன் பழைய நிலைக்கு மீட்டு தரும். முதுகு வலியை போக்கும் ஆசனங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

மர்ஜரியாசனம் பூனை போஸ் என்றும், பிட்டிலாசனம் மாடு போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இவை முதுகெலும்புகளுக்கு இடையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வலியை குறைக்கும்.

தனுராசனம் என்பது உங்கள் உடலை வில் போன்று வளைப்பதாகும். முதுகை வளைத்து, முதுகெலும்பிற்கு ஒரு வலுவான நீட்சியை வழங்குகிறது. மாதவிடாய் பிடிப்புகளை போக்கவும், கால் தசைகள் மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்தவும் உதவும்.

புஜங்காசனம் கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் உங்கள் முதுகு பகுதி முழுவதிற்கும் முழுநீள நீட்சியை வழங்குகிறது. 30 நோடி முதல் 1 நிமிடம் வரை செய்யலாம். நல்ல பலன் தரும்.

ஷலபாசனா ஆசனம் வெட்டுக்கிளி போஸ் என அழைக்கப்படுகிறது. இது முதுகு தண்டை பலப்படுத்தும். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

பாலாசனா குழந்தை போஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வதன் மூலம் முதுகெலும்பு நீட்டப்பட்டு, கீழ் முதுகில் உள்ள அசவுகரியம் நீங்கும்.

மகராசனம் முதலை போஸ் என்று அழைக்கப்படுகிறது. இது உடலை குறிப்பாக முதுகு பகுதியை ரிலாக்ஸ் செய்ய இறுதியாக செய்யப்படும்.