லேப்டாப்பை அதிக நேரம் பார்க்க வேண்டியுள்ளதா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!

இளைஞர்கள் வேலைக்காகவும் பொழுதுபோக்கிற்கும் எப்போதும் லேப்டாப், அலைபேசி என பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கண்ணிற்கு ஓய்வு தருவது இல்லை.

அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக சில வினாடிகள் ஓய்வு தர வேண்டும். இதனை 20 - 20 என்கிறோம். அதாவது 20 நிமிடம் லேப்டாப் பார்த்தால், அடுத்து குறைந்தது 20 வினாடியாவது கண் பயிற்சி செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டரில் இருந்து கண்ணை விலக்கி, கண்ணை இமைக்க வேண்டும். குறிப்பாக கண்ணை அடிக்கடி சிமிட்டிக் கொள்ள வேண்டும்.

கண்ணை இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக, வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்த மேலாக நகர்த்தி பயிற்சி செய்ய வேண்டும்.

கடிகார சுற்றுப்படியும், எதிர் கடிகார சுற்றுப்படியும் கருவிழியை அசைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாக வெப்பம் ஏற்படும் படி தேய்த்து, அதனை கண் இமைமேல் சில வினாடிகள் வைக்க வேண்டும்.

கம்ப்யூட்டரை பார்க்கும் அதே வேளையில் துாரத்தில் உள்ள எதாவது ஒரு பொருளையும் அடிக்கடி பார்க்குமாறு உங்கள் இருக்கை அமைய வேண்டும்.

மடியில் வைத்து லேப்டாப் பார்க்க கூடாது. பயணத்தின் போது படிப்பது, லேப்டாப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. படுத்துக்கொண்டே அலைபேசி பார்ப்பது மிகவும் தவறு. அவற்றை தவிர்க்கவும்.