வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

வெந்தயத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரோடீன், கால்சியம், கனிமம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் அதிகளவு உள்ளது.

வயிற்றில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இரவில் 1 டீ ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்த வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம்.

இதன் மூலம் நெஞ்செரிச்சல், எதிக்களித்தல் போன்ற அமிலத்தன்மை பிரச்னைகளை விரட்ட முடியும்.

சிறுநீரகத்தில் பிரச்னை உள்ளவர்கள் தினமும் வெந்தியத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.

வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார் சத்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

வெந்தயத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இதனால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைகின்றது

உடல் சூட்டினால் பலவகையான ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படும். அதை தவிர்க்க தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.