அடிக்கடி உண்டாகும் உதடு வறட்சிக்கு இவையும் காரணம்
குளிர், வறண்ட அல்லது வெப்பமான வானிலையால் உதடுகள் வறண்டு போகக்கூடும்.
சூரிய வெப்பம் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்படக்கூடும். நீரிழப்பு ஏற்பட்டாலும் வறட்சியடையும்.
வைட்டமின்கள் பி மற்றும் சி, இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பினும் உதடுகள் வறட்சியடையும்.
கீமோதெரபி மற்றும் முகப்பரு போன்ற பல காரணங்களுக்கான மருந்துகள் எடுப்பது கூட உதடுகளின் வறட்சிக்கு வழிவகுக்கும்.
லிப்ஸ்டிக், லிப் பாம் போன்ற அழகுசாதன பொருட்களின் ஒவ்வாமையும் வெடிப்பு ஏற்படுத்தக்கூடும்.
அதேப்போல் தைராய்டு, செரிமான பிரச்னைகளும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.