கல் உப்பை வெயிலில் காய வைத்தால் வைட்டமின் டி சத்து கிடைக்குமா?
ஒருசிலர் வைட்டமின் டி சத்தை பெறுவதற்காக கல் உப்பை சூரிய ஒளியில் ஓரிரு நாட்களுக்கு காய வைத்து பயன்படுத்துகின்றனர்.
ஆனால்,
சூரிய ஒளியிலுள்ள யூவிபி, யூவிஏ போன்ற புற ஊதா கதிர்கள் நம் சருமத்தில்
படும்போது, கொலஸ்ட்ராலுடன் வினைபுரிந்து வைட்டமின் டி உற்பத்தியாகும்.
உப்பில் இயற்கையாகவுள்ள அயோடின் சத்து காரணமாக, தைராய்டு பிரச்னை பலருக்கும் தவிர்க்கப்படுகிறது.
உப்பை வெயிலில் காய வைக்கும் போது இந்த அயோடின் சத்து முற்றிலும் குறைந்துவிடக்கூடும்.
எனவே,
இதை உட்கொள்ளும் போது வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைக்காது.
அதேவேளையில், அயோடின் சத்து இல்லாததால், தைராய்டு பாதிப்பு ஏற்படக்கூடிய
வாய்ப்புள்ளது.
எனவே, வைட்டமின் டி சத்து குறைவாக உள்ளவர்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்து, உரிய சப்ளிமென்ட், மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் சூரிய ஒளியில் வாக்கிங் செல்லும் போது
வைட்டமின் டி போதியளவு இயற்கையாகவே கிடைக்கக்கூடும்; உடல் ஆரோக்கியத்தையும்
மேம்படுத்தலாம்.