கோடையில் புட் பாய்சன் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது?

கோடை காலத்தில் முழுமையாக சமையல் செய்யாமல் அரை குறையாக சமைத்த இறைச்சி உணவு புட் பாய்சனை ஏற்படுத்தும்.

அதேபோல் அதிக வெப்பம் காரணமாக நீண்ட நேரத்திற்கு முன்பு வெட்டி வைத்த பழங்கள் நல்லதல்ல.

சில சமயம் முதல் நாள் சமைத்த உணவை மறுநாள் சாப்பிடுவது புட் பாய்சனை ஏற்படுத்தும்.

புட் பாய்சனால் வயிற்றுப் பிரச்னை ஏற்படும். குறிப்பாக கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது குமட்டல், வயிற்று வலி இருக்கும்.

மேலும் உடல் சோர்வு, வாய் வறட்சி, சிறுநீர் குறைவு, மயக்கம், பார்வை மங்கல், தசை பலவீனம் உள்ளிட்ட அறிகுறி தென்படும்.

ஆகையால் கோடைகாலத்தில் காய்கறிகள் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்தவும். கையை அடிக்கடி கழுவ வேண்டும்.

உணவை முழுமையாக சமைக்க வேண்டும். வெளியில் திறந்து வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.