மீண்டும் மிரட்டும் கொரோனா... பரவலை தடுக்க செய்ய வேண்டியவை
உலக நாடுகளில் ஆங்காங்கே கொரோனா பரவி வரும் நிலையில், நம்
நாட்டிலும் தாக்கம் துவங்கியுள்ளது. எனவே, கொரோனா தொற்று பரவலை தடுக்க
செய்ய வேண்டியவை..
இருமல் அல்லது தும்மல் வந்தால் கைக்குட்டையால் மூக்கு மற்றும் வாயை நன்றாக மூடவும்.
சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைர் மூலம் கைகளை அடிக்கடி கழுவவும்.
நெரிசலானை இடங்களை தவிர்க்கவும்.
காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களை
விட்டு விலகி, காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களுடனான
தொடர்பை தவிர்க்கவும்.
தொற்றால் பாதித்தவர் பயன்படுத்திய கைக்குட்டை உள்ளிட்ட துணிகளை பயன்படுத்தக்கூடாது. தொற்றால் பாதித்தவர் அருகில் நெருங்கக்கூடாது.
கண்,
மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடக்கூடாது. பொது இடங்களில் எச்சில்
துப்பக்கூடாது. டாக்டரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து எடுக்க வேண்டாம்.