ஆசிய இளம் ஆண்களை அச்சுறுத்தும் கேன்சர்!
பெருங்குடல், மலக்குடல் கேன்சரை பொருத்தவரை, ஆரம்ப நிலையில் இருந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். ஆண், பெண் இருவரையும் பாதிக்கும்.
பொதுவாக 50 வயதிற்கு மேல் தான் இந்த வகை கேன்சர் பாதிப்பு முன்பு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், இளம் வயதினரையும் பாதிக்கிறது.
குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் காரணமாக நம் நாடு உட்பட ஆசியா முழுதும், இளம் ஆண்களுக்கு மலக்குடல் கேன்சர் பாதிப்பு சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.
குடும்பத்தில் யாருக்காவது கேன்சர் இருந்தால், மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு அதிகம். 'பாலிப்ஸ்' எனப்படும் நுண்ணிய கட்டிகள் மலக்குடலில் உருவானால், 100 சதவீதம் கேன்சராக மாறும்.
ஆசனவாயில் ரத்தக் கசிவு, ரத்த சோகை, இயல்பாக மலம் கழிக்காமல் சிக்கல், வயிற்றுப்போக்கு என்று மாறி மாறி வருவது, காரணம் இல்லாமல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
ஆறு வாரங்களுக்கு மேல் அறிகுறிகள் இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
50 வயதில் அனைவரும் கொலோனோஸ்கோபி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.