புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து காப்பது எப்படி?

முதல் முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளிக்கு சென்ற சில நாட்களிலே காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

சாதாரணமாக குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களில் இதுபோன்ற தொந்தரவுகள் சரியாகிவிடும்.

நோய் இருக்கும் நேரத்தில் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலே பாதுகாக்க வேண்டும்.

அதற்கு மேல் தொந்தரவு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

பாதிப்புகளை தவிர்க்க பள்ளிக்கு அனுப்பும் முன் நகங்களை வளர்க்கவிடாமல் வெட்டி துாய்மையாக வைக்க வேண்டும்.

இரவு நன்கு துாங்க வைக்க வேண்டும். காலையில் திடீரென குழந்தைகளை எழுப்பாமல் அமைதியாக எழுப்ப வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.