பிரசவத்தில் சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பம் தரித்ததில் இருந்து சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் சீராக வைத்து கொள்ள வேண்டும் .

தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால், கருவில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கும். அப்போது வேறு வழியின்றி தாயை காப்பாற்ற சிசேரியன் செய்யும் நிலை ஏற்படும்.

குழந்தை எடை 3.5 கிலோவிற்கு மேல் போகும் போது தாயின் இடுப்பு எலும்புகள் பிரசவத்திற்கு வளைந்து கொடுக்காது.

உணவு கட்டுப்பாடு மிக அவசியம். ஜுஸ், பழங்கள், இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அதிக அளவு உப்பும் இருக்க கூடாது.

சிறுநீரில் அல்புமின் டிரேஸ் இருந்தாலும் அல்லது ஒன் பிளஸ் என இருந்தாலும் தாய்க்கு கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

அப்போது வேறு வழியின்றி சிசேரியன் செய்ய வேண்டியது வரும். எனவே குழந்தையின் எடை அதிகரிப்பு, தாய்சேயை காப்பாற்றவே சிசேரியன் செய்யப்படுகிறது.

எனவே கர்ப்பம் தரித்ததிலிருந்து சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சிசேரியன் தேவையிருக்காது.