நீர்க்கட்டிகளை போக்கும் கல்யாண முருங்கை!
கழற்சி கொட்டை, அசோகப் பட்டை, விஷ்ணு கரந்தை போன்று கல்யாண முருங்கை இலை நீர்க்கட்டிகளை போக்க நல்ல பலன் தரக்கூடியது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிவப்பு நிற பூக்கள் பூக்கும் இம்மரத்தை முள்முருங்கை என்றும், இதன் கொட்டைகளை தரையில் தேய்த்து தொட்டு பார்த்தால் சூடாக இருப்பதால், சூடு கொட்டை என்றும் அறியப்படுகிறது.
நீர்க்கட்டிகள் நீங்க கல்யாண முருங்கை இலை சூரணம் 1 டீ ஸ்பூன் தினமும் வெந்நீரில் கலந்து பருகலாம்.
சித்த மருத்துவர்கள் அறிவுரைப்படி இதை எடுத்துக்கொண்டால், சினைப்பை நீர்க்கட்டிகளால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறையும் என கூறப்படுகிறது.
இத்துடன் உடல் எடையும் குறையும். அதிக சர்க்கரை, எண்ணெய், கொழுப்பு உணவுகளை தவிர்த்து, புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
மேலும் பாதிப்பு உள்ளவர்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதை லேசாக்கும் யோகப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.
அதேபோல் கல்யாண முருங்கை இலை நுரையீரல் சளியை போக்கும் நல்ல மருந்து என்றும் கூறப்படுகிறது.