கிரில் சிக்கன் பிரியரா நீங்க? கொஞ்சம் கவனமா இருங்க !

சில நேரங்களில் சமைக்கும்போது வாணலியில் அடிபிடிக்கும் வாடை வரும்; உணவு கருகியிருக்கும். இப்படி அரைகுறையாக வெந்து கருகிய உணவை பலரும் எப்போதாவது சாப்பிட்டுட்டிருப்போம்.

இதுதவிர கிரில்டு சிக்கன், பார்பிக்யூ சிக்கன், டோஸ்டட் பிரட், உருளைக்கிழங்கு சிப்ஸ், பிஸ்கட்ஸ், ஃபிரென்ச் ஃபிரைஸ் போன்ற அதிக நேரம் சமைக்கப்பட்ட உணவுகளை பலரும் விரும்பி உட்கொள்வர்.

இதில் கிரில் சிக்கன் வயது வித்யாசமின்றி பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். ஆனால், இப்படி கருகிய உணவை அதிகமாக உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த பாதிப்பு அக்ரிலாமைடு என்கிற அமிலத்தால் ஏற்படும். இது மாவுச்சத்து நிறைந்த உணவுப்பொருள். நீண்டநேரம் சமைப்பதால் உருவாகும் ஓர் அமிலம்.

பேக்கிங், பார்பிக்யூயிங், டோஸ்டிங், கிரில்லிங், ஃப்ரையிங், போன்ற உள்ளிட்ட செயல்களால் உருவாகலாம். மேலும் பிஸ்கட், காபி போன்ற உணவுகளிலும் இந்த அமிலத்தின் இருப்பைக் கண்டறியலாம்.

எப்போதாவது இதுபோன்ற உணவினை உட்கொள்வதால் பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால், தொடர்ந்து கருகிய உணவுகளை உட்கொள்வோருக்கு அக்ரிலாமைடு அதிகமாக உடலில் ஊடுருவி, நரம்பு மண்டலத்தில் கலந்து புற்றுநோய் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.