படர் தாமரை பிரச்னை அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!!

பூஞ்சைத் தொற்றால் ஏற்படுவது படர் தாமரை. இப்பாதிப்பு காலில் ஏற்பட்டால் சேற்றுப்புண், தலையில் வரும் போது அலோபீசியா என்றும் பெயர்.

அதீத வெப்பம், அதிக ஈரப்பதம் உள்ள சூழலில் வசிப்போருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.

பாதித்தவரின் படுக்கையை பயன்படுத்துவது, இறுக்கமான ஆடைகள் அணிவது, துணிகளை நன்கு துவைத்து, வெயிலில் உலர வைக்காமல் பயன்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு வரலாம்.

பகல் நேரத்தில் துாங்குவது, மலம், சிறுநீர் இவற்றை அடக்குவதால், கழிவுகள் உடலில் சுற்றும். இதனாலும் தோல் வியாதிகள் வரலாம்.

உப்பு, புளி, காரம் அதிகமுள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகமாவதால் படர் தாமரை வரலாம்.

மீன் உட்பட அசைவ உணவுகளை, பிரச்னை இருக்கும் போது குறைந்தது 48 நாட்களாவது தவிர்க்க வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் இருக்கும் படர் தாமரைக்கு, பூஞ்சைக்கு எதிராகச் செயல்படும் பாதித்த பகுதியில் மாத்திரைகள் மற்றும் கிரீம் பூச சரியாகி விடும்.