சாக்லேட் சாப்பிட்டால் சிறுநீரக கல் உண்டாகலாம்

இன்றைய நாகரிக உலகில் பலரும் சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தலைவலி, உடல் வலிக்கு டாக்டர் தற்காலிகமாக பரிந்துரைக்கும் வலி மாத்திரைகளை, ஆண்டுக்கணக்கில் தொடர்வதும் முக்கிய காரணம்.

எல்லா வகையான கற்களுக்கும் ஆப்ரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிறுநீர் பாதையை கல் அடைத்து இருந்தால் மட்டுமே தேவைப்படும்.

சிறுநீரகங்களுக்கு உள்ளேயே இருக்கும் சிறிய கற்களை மாத்திரைகள், போதுமான அளவு திரவ உணவுகள் குடிப்பதன் வாயிலாகவே வெளியேற்றலாம்.

சிறுநீர் கற்களில் கால்சியம், பாஸ்பரஸ், யூரிக் அமிலம், ஆக்ஸ்சலேட் என்று 4 வகை உள்ளன. சில சமயங்களில் எதிர்கால தேவைக்கு என சிறிது கால்சியம் சத்தை சேமித்து வைக்கும்.

உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம், சாக்லேட்டிலுள்ள பாஸ்பரஸ் இரண்டிலும் தேவையான அளவை வைத்துக் கொண்டு, அளவுக்கு அதிகமானதை சிறுநீரகங்கள் வெளியேற்றி விடும்.

இதுதான் சிறுநீரகங்களின் வேலை. மரபியல், வேறு ஏதேனும் காரணங்களால், இந்த சமநிலை தவறும் போது, அதிகப்படியான கால்சியம், பாஸ்பரஸ் உடலில் தங்கி, கற்களாக உருவாகும்.

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்துக்கு, கட்டுப்பாடான ரத்த அழுத்தம், சோடியம் குறைவான உணவு அவசியம்.

கட்டுப்பாடில்லாத ரத்த சர்க்கரை அளவு நேரடியாக சிறுநீரகங்களை பாதிக்கும். உடல் பருமன் மறைமுகமாக பாதிக்கும்.