கல்லீரல் பாதுகாப்பு ஏன் அவசியமானது?

தோல்களுக்கு அடுத்து மனித உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு 'கல்லீரல்'. உடல் நலத்தில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.

செரிமானம், ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது உள்ளிட்டவை இதன் பணி.

அதிகரிக்கும் மது, துரித உணவுகள், உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உட்பட பலவற்றுக்கு வழிவகுக்கின்றன.

இவை கல்லீரல், இதயம், நுரையீரல், கிட்னி பாதிப்பு மற்றும் புற்றுநோயை உருவாக்குகிறது.

இதை தடுக்க உடற்பயிற்சி, சரிவிகித உணவு அடங்கிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.

கல்லீரலிலுள்ள நச்சுக்களை நீக்குவதற்கு கிரீன் டீ, எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு போன்றவற்றைப் பருகலாம்.