நீரிழிவை தடுக்கும் வெந்தயம், கறிவேப்பிலை!

நவீன ஆராய்ச்சிகளில் தாவரங்களின் மூலக்கூறுகளை பிரித்து ஆராய்ந்ததில், கசப்பும், துவர்ப்பும் உடலுக்கு நன்மை தரக்கூடிய, மருத்துவ குணம் நிறைந்த சுவை, என்று தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் இந்த சுவைகள் நம் தினசரி உணவில் இடம் பெறுவதில்லை. தினசரி சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பலை, வெந்தயம் இரண்டும் கசப்புத்தன்மை வாய்ந்தது.

அமெரிக்காவின் இலினாஸ் ஆராய்ச்சி மையத்தில் செய்த ஆராய்ச்சியில், கறிவேப்பிலையில் உள்ள 'கார்பசோல்' என்ற ஆல்கலாய்டை தனியே பிரித்து ஆராயப்பட்டது.

இதில் சர்க்கரை கோளாறின் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒருவர் தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டால், மருந்துகளை சார்ந்து வாழுவதை ஒன்றிரண்டு ஆண்டுகள் தாமதிக்கலாம் என்பது உறுதியானது.

வெந்தயத்தில் கரையக்கூடிய, கரையாத நார்ச்சத்துகள் இரண்டும் அதிகம் உள்ளன. இதன் கரையாத நார்ச்சத்து குடலை சுத்தமாக்கி மலமிளக்கியாக செயல்படுகிறது.

கரையக்கூடிய நார்ச்சத்து இதய நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை கரைக்கக் கூடியது என்று பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

அடுத்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற நோய்கள் வராமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இளம் வயதினர் விரும்பினால், தினசரி உணவில் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.