தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பை போக்க டிப்ஸ்...
தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.
எலுமிச்சை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்த பின்னர் தடவ வேண்டும்.
பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு, இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
கற்றாழையில் உள்ள ஜெல்லானது, காயங்களுக்கு மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், விரைவில் மறைய ஆரம்பிக்கும்.
தினமும் குளிக்கும் முன்பு, தழும்புகள் உள்ள இடத்தில் பாலை தடவி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.
சீமைச்சாமந்தி ப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்ட பின்பு, அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.