இரண்டாம் இதயத்தை காக்கும் மூன்று தாதுக்கள்!
உடலில் நீர்ச்சத்து குறையும் போது, ரத்தத்தில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் குறையும்.
எலும்புகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தசைநார்கள், இந்த மூன்று தாதுக்களும் குறையும் போது, அதன் வேலைகளை சரியாக செய்ய முடியாமல், அசைவின்றி அப்படியே நிற்கும்.
கெண்டைக்காலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், இதய ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இந்த தாதுக்கள் போதிய அளவில் இல்லாவிட்டால், இதய தசைகளின் செயல்பாடும் பாதிக்கப்படும்; மார்பு பகுதியில் இழுத்து பிடித்து வலிக்கும்.
அதனால் தான் கெண்டைக்காலை இரண்டாம் இதயம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
நுனி விரலில் நிற்பது, நடப்பது, உடற்பயிற்சி செய்வது என கெண்டைக்கால் தசைகளுக்கு பயிற்சி தேவை. பயிற்சிகளுடன் இந்த தாதுக்களும் சரியான அளவில் இருப்பதும் அவசியம்.
இந்த குறைபாட்டிற்கு, டாக்டர் ஆலோசனையுடன் சரியான அளவில் எடுக்கும்பட்சத்தில் பிரச்னையில் இருந்து எளிதில் குணமாக முடியும்.