சிசேரியனுக்கு பிறகு வரக்கூடிய இடுப்பு வலிக்கு தீர்வு என்ன?

பொதுவாக பெண்களுக்கு பிரசவம் இயல்பாக நடக்காத நிலையில் ஆப்ரேஷன் வாயிலாக குழந்தை பிறக்க தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்துவது வழக்கம்.

இதனால் பிரசவத்துக்கு பின் இடுப்பு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

பிரசவத்துக்குப் பின் வயிற்றைச் சுருக்குதல், எலும்புகளை வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கி பாரம்பரியமாக சில விஷயங்கள் பின்பற்றப்படுகின்றன.

அப்போது, தேவையான ஓய்வு, உடல் புத்துணர்வு பெறுவதற்கான ஊட்டம், சரியான உடற்பயிற்சிகள் ஆகியவை கிடைத்தால் தான் பிரசவித்த பெண்களின் உடல் பழைய நிலைக்குத் திரும்பும்.

இது சுகப்பிரசவம், சிசேரியன் என இரண்டுக்கும் பொருந்தக்கூடும்.

ஆப்ரேஷனுக்கு பின் முதல் 3 மாதங்களில் ஒரு பெண் தன்னை எந்தளவுக்கு ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்து இடுப்புவலி பிரச்னைகளை தவிர்க்கலாம்.

ஆப்ரேஷனுக்கு பின் வயிறு மற்றும் முதுகுப்பகுதியில் உள்ள தசைகளின் பலம் கட்டாயமாக குறைந்திருக்கும். அந்தத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

பிரவசத்திற்கு பின் பெண்கள் கால்சியம், இரும்பு சத்து மாத்திரைகளை டாக்டர் அறிவுரைப்படி 2 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் உட்கொள்ள வேண்டும்.

முதுகுத்தண்டு தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இடுப்பு வலியை தவிர்க்கலாம்.