குதிகால் வலியும், குறைய சில தீர்வும்!
குதிகால் வலிக்கு பிளான்டார்ஃபேசியைட்டிஸ் என்று பெயர். பாதத்தின் அடிப்பகுதியில் குதிகால் எலும்பையும், கால்விரல்களையும் இணைக்கும் தடிமனான திசுநார்ப்பகுதி வீக்கமடைவதால் இந்த வலி உண்டாகிறது.
பொதுவாக நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்கே இந்தப் பிரச்னை காணப்படும். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகமாகவே ஏற்படுகிறது.
கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய், முடக்குவாதம் போன்ற பல காரணங்களால் இது வரலாம்.
காலையில் எழுந்த உடனேயே விரல்களைச் உள்ளே மடக்கிப் பிறகு விரியுங்கள். கெண்டைக்கால் தசைகளையும் மடக்கி விரியுங்கள்.
மேலும் டவல் ஸ்டெர்ச், வால் ஸ்டெர்ச், சேர் ஸ்டெர்ச் போன்ற ஸ்டெர்ச்ங் செய்யலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து அதில் கால்களை வைக்கலாம். இதனால் குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும்.
அதிக வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவது மற்றும் நடப்பதை குறைத்துக் கொள்ளவும். மேலும் எடை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லது.
வாழ்வியல் மாற்றங்கள், மற்றும் பிஸியோதெரபி பயிற்சிகள் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும்.