துாக்கமின்மை பிரச்னைக்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு உண்டா?
மன அழுத்தம், செல்போன் பயன்படுத்துவது, மது பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் துாக்கமின்மை ஏற்படும்.
இதற்கு யோகா, இயற்கை மருத்துவத்தில் ஹைட்ரோதெரபி, மசாஜ் தெரபி, அரோமா தெரபி மூலம் தீர்வு காண முடியும்.
ஹைட்ரோதெரபியில் வெந்நீர் கால் குளியல், இடுப்பு குளியல், முதுகெலும்பு குளியல் தினமும் செய்ய வேண்டும்.
தலை, பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் துாக்க ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கும். துாங்க செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தியானம் செய்வது சிறந்தது.
வாரத்தில் 3 முறையாவது மண் குளியல் செய்வதன் மூலம் உடல் வெப்பம் குறைந்து அமைதியான துாக்கத்தை தரும்.
காபி, டீ, சாக்லேட், எண்ணெய் உணவுகள், மதுபானங்கள் துாக்கமின்மைக்கு முக்கிய காரணங்கள்.
மதுபானம் ஆரம்பத்தில் துாக்கத்தை தந்தாலும், நாளடைவில் அமைதியான துாக்கத்தை பாதிக்கும்.
இரவில் அதிக உணவு உட்கொள்ளக்கூடாது. உணவு முறைகளை கட்டுக்குள் வைப்பதன் மூலமும் துாக்கத்தை மேம்படுத்த முடியும்.