சமீபகாலமாக பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வர காரணம்?

மெனோபாஸ் வயது வந்தாலே, மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ரத்த அடர்த்தியை குறைக்கும் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மெனோபாஸ்க்கு பின் ஹார்மோனல் மாற்றம் ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

அச்சமயத்தில், யோகா, நல்ல உணவு மற்றும் துாக்கம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

ஆண்களை விட மாரடைப்பால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்களுக்கு வழக்கமான மார்பு வலியுடன் கூடுதலாக வாந்தி, தாடை வலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

இதை கவனிக்க தவறும்பட்சத்தில், சிகிச்சை பெறுவது தாமதமாகிறது.

முன்கூட்டிய மாதவிடாய், எண்டோமெட்ரியோசிஸ், கர்ப்பக்கால உயர் ரத்த அழுத்தக் கோளாறுகள் ஆகியவை மாரடைப்புக்கான காரணங்களாகும்.