வெயில் காலத்தில் பத்திரம் : டிரை ஐ கண்ணை பாதிக்கும்
முதுமையில் கண்கள் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
அதுவும், வெயில் காலங்களில் கண்ணீர் உற்பத்தி குறைந்து, டிரை-ஐ பிரச்னை அதிகமாக காணப்படும்.
கண் உருத்துதல், எரிச்சல், பாரமாக இருப்பது போன்ற உணர்வு, மங்கலாக தெரிவது இதன் அறிகுறிகள்.
வெயிலில் செல்லும் போது கண்ணுக்கு கண்ணாடி அணிவதும், முழுவதும் மூடிய ஹெல்மெட் அணிவது, அவசியம்.
வீட்டில் ஏ.சி., காற்று நேரடியாக படும்படி அமர்வதை தவிர்க்கலாம்.
உலர் கண் பிரச்னை இருப்பவர்கள், சுடுதண்ணீரில் 10, 15 நிமிடம் இமைகள் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.