தோள்பட்டை பந்து மூட்டு இறுக்கம் ஏற்பட காரணங்கள் என்னென்ன?

மற்ற மூட்டுகளை போல இல்லாமல், எல்லா கோணத்திலும் சுழலக்கூடிய தன்மை உடையது தோள்பட்டை பந்து மூட்டு.

முன், பின், பக்கவாட்டில் என்று ஒவ்வொரு திசையில் சுழலுவதற்கும் இரண்டாம் அடுக்கு தசைநார்கள் உதவும். இந்த தசைநார்களில் எதில் சிதைவு ஏற்படுகிறதோ அதற்கேற்ப பிரச்னைகள் வரும்.

பொதுவாக சர்க்கரை கோளாறு, தைராய்டு பிரச்னை, இதயக் கோளாறு இருப்பவர்களுக்கு தோள்பட்டை இறுக்கம் வரும் வாய்ப்பு அதிகம். இது தவிர, அடிபடுவதாலும் வரலாம்.

இதில் முக்கியமானது 'புரோஷன் ஷோல்டர்' என்கிற தோள்பட்டை இறுக்கம், தோள்பட்டை விலகுதல், தசைநார் கிழிதல் ஆகிய மூன்றுமாகும்.

தோள்பட்டைக்கு நிலைத்தன்மையை தரும் முதல் அடுக்கு தசைநார்கள் தானாக புண்ணாகி, தடித்து, சுருங்கி விரியும் தன்மை போய், தோள்பட்டை உறைந்து விடும்.

எந்த பிரச்னையும் இல்லாவிட்டால், தானாகவே வந்த தோள்பட்டை இறுக்கம் சரியாகி விடும். சிலருக்கு தொடர்ந்து பல மாதங்கள் வலி இருக்கும் போது தான் சிகிச்சை தேவைப்படும்.

சிலருக்கு பிசியோதெரபி தரும்போது நிவாரணம் கிடைக்கும். வலி நிவாரணி, நரம்புகளை வலிமைப்படுத்தும் மாத்திரைகள் வழங்கப்படும்.