மூளையை உற்சாகமாக்க உடற்பயிற்சி உதவும்...

மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு கற்றல், நினைவாற்றல், பகுத்தறியும் திறன் கொண்ட ஹிப்போகாம்பஸ், ப்ரீ ப்ரொன்டல் கார்டெக்ஸ் முன் மூளையின் செயல்பாடு குறைவாக இருக்கும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், இவை சிறப்பாக செயல்படவும், பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் உதவும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இது தவிர, நேர்மறை உணர்வை எற்படுத்தும் ரசாயனங்களை மூளை அதிக அளவில் சுரக்கத் துாண்டும்.

உடற்பயிற்சி செய்யும்போது, ​​ மூளை எண்டோர்பின்கள், செரோடோனின், டோபமைன் போன்ற மகிழ்ச்சியைத் தரும் ரசாயனங்களை சுரக்கிறது

எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணிகளாகவும் மனதை அமைதியாகவும் வைத்திருக்கவும் உதவுகின்றன

ஆரோக்கியமான துாக்கம், பசியை செரோடோன், ஒழுங்குபடுத்துகிறது நடை பயிற்சி, உடற்பயிற்சியை முடித்த பின், நிம்மதியான மன உணர்வை டோபமைன் தருகிறது

மன அழுத்தம், பதற்றம் உட்பட மன பிரச்னைகளுக்கு தரப்படும் பல வகையான மருந்துகள், செரோடோன், டோபமைன் சுரப்பை அதிகரிக்க உதவுகின்றன.

ஆனால் தினசரி உடற்பயிற்சி செய்யும் போது, இவை இயற்கையாக சுரந்து, கார்ட்டிசால், அட்ரீனலின் போனற் மன அழுத்த ஹார்மோன் சுரப்பை குறைக்கின்றன.