பித்த உடம்பு என்றால் என்ன? அதற்கான தீர்வுகள் சில
நாம் உண்ணும் உணவு, உடலின் இயல்பான தன்மை, சுற்றுப்புற வெப்பம், குளிர்ச்சிக்கு ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகியன வறட்சி, வெப்பம், குளிர்ச்சி ஆகிய தன்மைகளை உடையன.
உணவில் சேர்க்கப்படும் உப்பு, புளிப்பு, காரச் சுவைக்கு ஏற்றார் போல் உடம்பில் பித்தம் அதிகரிக்கும். பித்தம் உடலின் உள்ளுறை வெப்பத்தை அதிகரிக்கும்.
இதனால் உடல் சூடு, சிறுநீர் செல்லும்போது எரிச்சல், கண் எரிச்சல், தொண்டை, வாய் உலர்தல், ஆசனவாய் பகுதியில் வறட்சி, செரிமான பிரச்னை, வாந்தி, பசியின்மை ஏற்படலாம்.
பித்ததை சீராக்க பழங்களில் தர்பூசணி, முலாம்பழம், மாதுளை, ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை உணவும்.
அதேபோல் கீரை வகைகள், வெள்ளரி, சுரைக்காய், பூசணிக்காய், பீட்ரூட் போன்றவை அடிக்கடி உண்ண வேண்டும்.
எப்போதும் உணவில் அதிகளவு நார்ச்சத்தை சேர்த்துக் கொள்ளவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.
மேலும் சாப்பிடும்போது சிறிய அளவுகளில், அடிக்கடி சாப்பிடவும். குறிப்பாக உணவை மெதுவாக மென்று சாப்பிடவும்.