கோவையில் பெண்களை தாக்கும் முகவாதம்! அதிக பனி காரணமா?
கோவையில் 10 ஆண்டுகளாக இல்லாத 16 டிகிரி செல்சியஸ் கடும் குளிர் நலவுகிற்து. இதனால் முகவாத பிரச்சனை பெண்களிடம் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
கார்த்திகை, மார்கழி பனி நிலவும் அதிக குளிரால் முகவாதம் (பெல்ஸ் பால்சி) ஏற்படும். இது பெண்களை அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது.
அதிக பனிக் காற்று காது வழியாக சென்று முகத்தில் உள்ள நரம்பில் நீர் கோர்க்கும். பின் நரம்பின் சிறிய துவாரத்தை அடைத்து, முக தசைகளை செயலிழக்க செய்யும்.
இதனால் பேசும்போதும், சிரிக்கும்போதும் ஒரு பக்கமாக வாய் கோணும்.
பிரச்னை உள்ளவர்கள் குளிர்காலத்தில் அதிகாலை மற்றும் நள்ளிரவு பயணத்தை தவிர்க்கவும்.
பயணத்தின்போது காதில் பஞ்சு, தலையில் ஸ்கார்ப், ஹெல்மெட் அணிவதன் மூலம் பனிக் காற்று காதில் புகாமல் தடுக்கலாம்.
காது வலி, அடைப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனே டாக்டரிடம் சிகிச்சை எடுக்கவேண்டும்.
இந்த பருவத்தில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.