ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய பயிற்சிகள் சில..

மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதற்கு எளிய பயிற்சிகள் உள்ளன.

இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கையையும், வலது கை பழக்கம் உள்ளவர்கள் இடது கை பயன்படுத்த பழக வேண்டும்.

இதனால் மூளையில் இடது பாகம், வலது பாகம் ஒருங்கிணைந்து செயல்பட துவங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது பாக மூளை செயல்படும். இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது பாகம் வேலை செயல்படும்.

இதனை மாற்றி பழக்கம் ஏற்படுத்தும் போது 2 பாக மூளை பகுதிகளும் செயல்படும். குழந்தைகள் அதிக ஞாபக சக்தியை பெறுவர்.

முதியவர்களுக்கும் அல்சீமர் எனும் மறதி நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

சில நேரங்களில் அமைதியாக அமர்ந்து ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்தால் மூளைக்கு அதிகளவு ஆக்சிஜன் சென்று புத்துணர்ச்சி ஏற்படும்.

அலைபேசியை அதிக அளவு பார்க்கும் பழக்கம் இருந்தால் தவிர்த்துவிட்டு புத்தகங்கள் படிக்க வேண்டும்.