வேர்க்கடலையை ஊற வைக்காமல் சாப்பிடலாமா?
வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான இரும்பு, போலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை நிறைந்துள்ளன.
குறைந்தது ஆறு அல்லது எட்டு மணி நேரம் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலையில் அதில் உள்ள அனைத்து சத்துகளும் முழுமையாக கிடைக்கும் தன்மை அதிகம் உள்ளது. அது முழுமையான உணவு போன்றது.
ஊற வைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். அதுவே வேர்க்கடலையை ஊற வைக்கும் போது அதில் உள்ள பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும்.
வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியையும் தடுக்கும்.
குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது. மேலும் குழந்தைகளுக்கு தேவையான பாஸ்பரஸ், உப்பு சத்துக்கள், புரத சத்துக்கள் வேர்க்கடலையில் அதிகம் உள்ளது.
அதேபோல் வேர்க்கடலையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கண்டிப்பாக கொறிக்கக் கூடாது. அப்படியே விழுங்கவும் கூடாது. காரணம் வேர்க்கடலை சற்றுத் தாமதமாகத்தான் செரிமானமாகும்
வறுத்த வேர்க்கடலையை விட அவித்த வேர்க்கடலை மிகவும் சத்தானது.