தலையில் அரிப்பை ஏற்படுத்தும் ஸ்கால்ப் பாலிகுளிட்டிஸ்…

ஸ்கால்ப் பாலிகுளிட்டிஸ் என்பது தலைமுடியின் வேர்க்கால்களை பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும்

இந்த ஸ்கால்ப் ஃபாலிகுளிட்டிஸ் என்பது ஒருவரின் தலைமுடியின் வேர் கால்களை தாக்கி அதனால் சிறிய சிவப்பு நிறத்தில் கட்டிகள் போலவும் அழற்சி தன்மையை உருவாக்கும்.

பாதிப்பை அதிகம் ஆனால் அதிலிருந்து சீழும் உருவாகலாம். மேலும் சிறிது வலியை தரும். பாலிகுளிட்டிஸ் வந்தால் எப்படி சமாளிப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.

சீரற்ற தலை முடி பராமரிப்பு, தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, அதிக அழுத்தத்தை தரக்கூடிய ஹேர் ஸ்டைல்கள், பொடுகு போன்றவை பாலிகுளிட்டிஸ் ஏற்பட முக்கிய காரணங்கள்.

பாலிகுளிட்டிஸ் ஏற்படும் பட்சத்தில், முடியின் வேர் கால்களில் பாக்டீரியா தங்கி இருக்கும். இதனால் அதிக அளவில் முடி கொட்டும்.

சருமத்தில் ஏற்படும் மாற்றங்களினாலும், ஹார்மோன் மாற்றங்களினாலும், சில சமயம் பருவநிலை மாற்றத்தாலும் இந்த பாக்டீரியா அழற்சி தன்மையை உண்டாக்கும்.

பாலிகுளிட்டிஸ் தொற்று ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் தலையில் அழுக்கு சேர்வதையோ அல்லது எண்ணெய் வைப்பதையோ ஒருவர் தவிர்க்க வேண்டும்.

பாதிப்பு அதிகம் ஆகும் போது மருத்துவரின் ஆலோசனையை பெறவும். மேலும் பிரச்னைகளை தீர்க்கும் வகையிலான மருத்துவ தன்மைக் கொண்ட ஷாம்புக்களை பயன்படுத்தலாம்.