லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் சிறப்பம்சங்கள்...
லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை என்பது கேமரா, சிறப்பு கருவிகளை கொண்டு சிறிய கீறல் மூலம் செய்யப்படும் செயல்முறை ஆகும்.
இது திறந்த அறுவை சிகிச்சையை விட பல நன்மைகளை வழங்குகிறது.
இந்த சிகிச்சையின் மூலம் சிறிய வெட்டுக்களே இருப்பதால் குறைவான திசு சேதம் ஏற்படுகிறது.
இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் வடு குறைவாகவே காணப்படும்.
மேலும் அதிகப்படியான ரத்தப்போக்கு, அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் வலியை குறைக்கிறது.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் நோய் தொற்றுக்கான ஆபத்து குறைவாகவே காணப்படும்.
எனவே நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைந்து தங்கள் வழக்கமான செயல்பாடுகளுக்கு விரைவாக திரும்ப முடியும்.