இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உலர்பழங்கள் சில
முந்திரி... எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் பாதிப்பை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பாதாம்... வைட்டமின் ஈ, ஒமேகா - ஃபேட்டி அமிலம் உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உலர் திராட்சை... இதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்; ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தை எதிர்த்து போராடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படக்கூடும்.
அத்திப்பழம்... இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.
வால்நட்... இதுலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பிஸ்தா... உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஹெச்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிப்பதால், இதயம் தொடர்பான பாதிப்புகள் குறையும்.