வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா?

இளநீரில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், தினமும் காலையில் இதை குடிப்பதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

குறிப்பாக வெயில் காலங்களில் இளநீர் தாகத்தை தணித்து நீரேற்றம் அளிக்கிறது. மழை மற்றும் குளிர் காலங்கள் அல்லாத கோடையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கும் போது செரிமான ஆரோக்கியப் மேம்பட்டு, அஜீரணம், வயிறு உப்பசம், வாயு தொல்லைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இளநீரிலுள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதால் தொற்றுநோய்களின் அபாயத்தை தவிர்க்கலாம்.

பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளலாம்; சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள் அடிக்கடி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதில், குறைந்தளவிலான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

டையூரிடிக் பண்புகள் சிறுநீரகத்திலுள்ள கழிவுகளை நீக்கி, உடல் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆனால், உப்பு உள்ளதால், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.