டெங்கு காய்ச்சல்... விழிப்புணர்வு வழிமுறைகள் இதோ !

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுவால் வருகிறது. தண்ணீர், காற்று இவற்றால் வராது. சுத்தமான தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஏடிஸ் புழு உற்பத்தியாகி கொசுவாக மாறுகிறது.

காய்ச்சல் வந்தால் உடம்பில் எலும்பு முறிவு ஏற்பட்டால் எவ்வாறு வலிக்குமோ, அந்தளவுக்கு உடலில் வலி இருக்கும்.

காய்ச்சல் வந்தால் ரத்த தட்டுக்கள் அளவு குறையும். காய்ச்சல் வந்தவுடனேயே அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி எதுவும் கிடையாது. நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் தண்ணீர், மோர், இளநீர், பழச்சாறுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நிலவேம்பு கஷாயமும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளை பகல் நேரத்தில் கூட கொசுவலை கட்டி தான் துாங்க வைக்க வேண்டும். உரிய பாதுகாப்புடன் கொசு கடிக்காமல் பாதுகாத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்கலாம்.