குளிர்காலத்தில் அடிக்கடி மஞ்சளை சேர்க்க இதோ டிப்ஸ்
மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்று ஆக்ஸினனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.
குளிர்காலத்தில் அடிக்கடி இதை உணவில் சேர்ப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
குளிர்காலத்தில் அடிக்கடி மஞ்சளை உட்கொள்ள மிகவும் எளிய, பிரபலமான வழி கோல்டன் பால். 1 டம்ளர் பாலில் சிறிது மஞ்சள், மிளகுத்தூள் கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
சிறிதளவு மஞ்சள், இஞ்சி மற்று தேனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக பருக, செரிமானம் எளிதாகும்.
உங்களுக்கு பிடித்தமான சூப்பில் சிறிதளவு மஞ்சளை சேர்க்க, ஆரோக்கியம் மேம்படக்கூடும்.
தேனில் மஞ்சள் தூள் கலந்தால், மஞ்சள் தேன் ரெடி. இதை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட, தொண்டைபுண், இருமல் போன்ற பருவகால ஒவ்வாமைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
தயிர், தேனுடன் உங்களுக்கு பிடித்தமான ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களுடன் சிறிதளவு மஞ்சளை சேர்த்த ஸ்மூத்தியை அடிக்கடி பருக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.