கால்சியம் குறித்த சில புரிதல்கள்...

நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400 கிராம் கால்சியம் ஆண்களுக்கும், பெண்களுக்கு, 1 கிலோவும் இருக்கிறது.

நம் உடலின் தசைகள் சுருங்கி விரியவும், இதயத்தின் இனிமையான தாள லய துடிப்பிற்கும் கால்சியத்தின் உதவி தேவை.

நாம் உண்ணும் உணவை ரசிக்க, ருசிக்க மற்றும் கரைக்க தேவையான எச்சிலை சுரக்கவும் உதவி செய்கிறது.

பொதுவாக, 30 வயதுக்கு மேல் ஆகி விட்டால், எலும்பிலுள்ள கால்சியம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் நம் எலும்பு வளர்ச்சி அத்துடன் நின்றுவிடும்.

ஆகையால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க, தொடர்ந்து உடலுக்கு வேண்டிய கால்சியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும்.

தினமும் சுமார், 400 500 மில்லி கிராம் வரை கால்சியம் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின் வழியே வெளியேறுவதால், உடலின் கால்சியம் அளவு தினந்தோறும் குறைகிறது.

மாதவிடாய் சமயத்தில் தினம், 1 கிராம் கால்சியம் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு, மாதவிடாயின் தொந்தரவு இருக்காது. அப்போது உண்டாகும் வயிற்று வலியையும், கால்சியம் துரத்தி விடும்.