ஞாபக மறதியை குறைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு

பெர்ரி, ஆரஞ்சு போன்ற 'சிட்ரஸ்' அமிலம் அதிகமுள்ள பழங்கள், ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமுள்ளன.

பச்சைக் காய்கறிகள், புரோகோலி, பருப்பு வகைகள், தக்காளி, ஆலிவ் எண்ணெய், தேயிலை உள்ளிட்டவைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமுள்ளன.

செல் புதுப்பிக்கும் செயலின் போது, நிலையற்ற மூலக்கூறுகளால் பல சிதைவுகள் ஏற்படும்.

உடலின் உள்செயல்பாடுகளின் போது, ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ள உணவை சாப்பிடுவதால், செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜனேற்றம் நடந்து, சிதைவை தடுக்கும்.

அறிவுத் திறன் குறைபாடும், ஞாபக மறதியும் வயதானால் பொதுவாக வரும் பிரச்னைகளாகும்.

தினசரி உணவில், இவற்றை சாப்பிடும் பழக்கத்தை, இளம் வயதிலிருந்தே பழகினால், வயதானால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.