நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உடலில் புண் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் ?
நீரிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் காலில் ஏற்படும் புண்ணிற்கு முறையான சிகிச்சை செய்து குணப்படுத்தாவிட்டால், கால் விரல்களையோ, காலையோ இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன.
கட்டுப்பாடில்லா ரத்த சர்க்கரை நரம்புகளை பாதிப்பதால் வலி உணர்வினை இழக்க நேரிடுவதால், புண் ஏற்படுவதை அறியா நிலையும், புண் ஆறுவதற்கான சூழ்நிலையும் பாதிக்கின்றது.
நீரிழிவால் ஏற்படக்கூடிய நரம்பு பாதிப்பு கால் வடிவமைப்பில் மாற்றம் செய்யக்கூடும் என்பதால் காலில் புண் உண்டாகும்.
கட்டுப்பாடில்லா ரத்த சர்க்கரை கால் ரத்த ஓட்டங்களை பாதிப்பதால், புண் ஆறுவதற்கு தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைகிறது.
அதிக ரத்த சர்க்கரை புண், அதை சுற்றியுள்ள தசைகளில் கிருமிகள் வளர்வதற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்குகிறது.