நிபா வைரஸ் அறிகுறியும், பாதுகாப்பு முறையும்!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் நிபா வைரஸ் பரவுகிறது.
வவ்வால்கள் கடித்த பழங்களை மனிதர்கள் சாப்பிடுவதால் நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் போது அடுத்தவர்களுக்கும் தொற்று பரவுகிறது.
காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், சுவாசப் பிரச்னை ஆகியவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
தொற்று ஏற்பட்டு, 5 - 14 நாட்களில் அறிகுறிகள் தென்பட துவங்குகின்றன.
தொற்று தீவிரம் அடைந்ததும் சுவாசக் கோளாறு மற்றும் மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிரை பறிக்கிறது.
அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்படாத பழச்சாறுகள், மரத்தில் இருந்து பாதி உண்ணப்பட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்,
தொற்று காலத்தில் காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன் படுத்த வேண்டும்.