உங்களை மேம்படுத்த உதவும் அழகு குறிப்புகள் சில!

ஒரு கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகியவற்றை ஒன்று சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இதை முகத்தில் உள்ள பருக்களில் பூசி வந்தால், பருக்கள் மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.

முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பூசி வந்தால் மிருதுவாக மாறும்.

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.

சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க, தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது. தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து, ஆறு மாதம் பூசி வர, வடு மறையும்.

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் பூசி வர, சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.