கோடைக்கால வெப்ப தடிப்புகள் - வீட்டிலேயே இருக்கு தீர்வு..!
கோடைக்காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது.
உடலின் வியர்வை சுரப்பிகள் தடுக்கப்படும் போது வெப்ப வெடிப்பு ஏற்படுகிறது.
இது தோலின் மேல் அடுக்குகளில் வியர்வையை உருவாக்க வழிவகுக்கிறது.
அதிகப்படியான வியர்வை, பாக்டீரியா மற்றும் பிற ஆபத்து காரணிகளால் இந்த அடைப்புகள் ஏற்படுகின்றன.
சந்தனப் பவுடரை சிறிதளவு தண்ணீரில் கலந்து வெடிப்பு உள்ள இடத்தில்
தடவினால், உஷ்ணத்துடன் தொடர்புடைய எரிச்சல், வலி உணர்வும் குறையும்.
கற்றாலை ஜெல் அழற்சியை தடுக்கும் சிறந்த மருந்தாகும். அவை வெப்பத்தினால்
ஏற்படும் அரிப்பு, வெடிப்பை தடுக்கவும், அதன் அறிகுறிகளை மேம்படுத்தவும்
உதவுகின்றன.
½ டீஸ்பூன் முல்தானி மிட்டியை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி,
பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தடவி 10 நிமிடங்கள் வைத்து கழுவினால்
குணமாகும்.
துளசி இலைகளை தேனுடன் அரைத்து பேஸ்ட் செய்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவினால் வெப்பத்தினால் ஏற்படும் அரிப்பு, வெடிப்பு நீங்கும்.