நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண், சிறுநீரக பரிசோதனை அவசியமா?

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரையினால் ஏற்படக்கூடிய கண் விழித்திரை நரம்புகள் பாதிப்பின் ஆரம்ப நிலையில் அறிகுறிகளோ, பிரச்னையோ ஏற்படுத்தாது.

ஆரம்ப நிலையில் இந்த பாதிப்பை கண்டறிந்தால் ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, சில மருந்துகள் மற்றும் லேசர் சிகிச்சையின் மூலம் கண் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.

நீண்டகாலமாக ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிறுநீரகத்தில் புரதம் கசியத் தொடங்குகிறது.

இந்நிலையில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த கட்டுப்பாடு, சில பாதுகாப்பு மருந்துகள் உட்கொள்ளாவிட்டால் பாதிப்பு தீவிரமாகி சிறுநீரகத்தை பாதிக்கின்றது.

மேலும் உடல் வலி, காய்ச்சலுக்கு பயன்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளும் ஊசிகளும் சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கக்கூடும்.

ஆண்டுக்கு ஒருமுறை 'மைக்ரோ ஆல்புமின் யூரியா' எனும் பரிசோதனை செய்து சிறுநீரக நிலையை அறிந்து கொள்ளுதல் அவசியமானது.