இஞ்சி ஜூஸ் எப்படி குடிக்கலாம்?
பருவகால பாதிப்புகளான உடல் வலியுடன் கூடிய காய்ச்சல், சளி மற்றும் தலைவலி போன்றவைக்கு இஞ்சி ஜூஸ் நிவாரணம் தருகிறது.
ஒரு விரல் அளவுக்கு தோல் நீக்கிய இஞ்சியை தட்டிப்போட்டு, நிறைய தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து, டம்ளரில் மாற்றி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து தெளிந்த பின், அந்த தண்ணீரை மட்டும் குடிக்கவும்; விருப்பப்பட்டால் தேன் சேர்க்கலாம்.
அடியில் தேங்கியுள்ள மாவு போன்ற பகுதியை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப்புண் உண்டாகக்கூடும்.
வாதப்பிரச்னை உள்ளவர்களுக்கு அப்படியே இஞ்சி ஜூஸ் குடிக்கும்போது, அமிலப்பிரச்சனை, வயிற்றுப்புண் மற்றும் வயிற்றுப்போக்குக்கு அதிக வாய்ப்புள்ளது.
தினமும் 2 வேளை இந்த இஞ்சி ஜூஸை குடிக்கலாம். ஓரிரு நாட்கள் சாப்பிட உடல் வலி, தலையில் நீர் கோர்த்திருத்தல் போன்ற பல பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.