சிறுவயதில் கண்பார்வை குறைபாடா? தடுக்க என்ன செய்யலாம்!!
குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் நேராக உள்ளதா என பார்க்க வேண்டும்.
5 வயதிற்குள் கண்களில் எந்த பிரச்னையாக இருந்தாலும் கண்டறிந்து உடனே கண் டாக்டரை அணுக வேண்டும்.
பார்வை குறைபாடுகள் இருந்தால் உடனே கண்ணாடி அணிய வேண்டும். கண்ணாடி அணிவதால் கண்கள் தான் பாதுகாக்கப்படுகிறது.
சிறுவயது குழந்தைகள் அதிக நேரம் கணினியில் கேம்ஸ் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
மாலை நேரத்தில் சூரிய வெளிச்சம் படக்கூடிய பகுதிகளில் சென்று குழந்தைகள் விளையாட வேண்டும்.
காய்கறிகள், பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் வைட்டமின் ஏ குறைவு இல்லாமல் இருக்க வேண்டும். கீரை, மீன் உணவுகளை தவிர்க்கக்கூடாது.