நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பழம்!
துாக்க மாத்திரையாக வாழைப்பழம் செயல்புரிவதாக கண்டுபிடித்துள்ளனர், அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவ நிபுணர்கள்.
துாக்க மாத்திரையில், 'ட்ரைட்டோடன்' என்ற ரசாயனம் உள்ளது. இதே ரசாயனம் தான் வாழைப்பழங்களிலும் உள்ளது.
துாக்கத்திற்கு முக்கியமான இன்னொன்று, தசைகளின் இறுக்கம் நீங்கி, தளர்வடைய வேண்டும். இதை செய்யும் மக்னீச சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளது.
வாழைப்பழத்தை சாப்பிட்ட பின், ஒரு மிளகை கடித்து, சுவைத்து மெல்ல வேண்டும். இப்படி செய்வதால், கபத்தால் வரும் தொல்லை இருக்காது.
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும்.
வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.