மெனோபாஸ் காலத்தில் கால் மூட்டு வலி வராமல் தடுப்பது எப்படி?
கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், மோர் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கீரைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி உள்ளிட்ட சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
மூட்டு வலி ஏற்படும் பெண்கள் அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல், மூட்டுகளை வளைக்காமல் சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அடிக்கடி படி ஏறி இறங்குவதை தவிர்க்க வேண்டும்.