பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வருவதை தவிர்க்க !

பனிக்காலத்தில் உடல் குளிர்ச்சி அடைவதுடன், குழந்தைகளுக்கு எளிதில் மூக்கில் நீர் வடிதல், சளி, காய்ச்சல், இருமல் ஏற்படுகிறது.

இதனை தடுக்க குழந்தைகளை காலை, இரவு நேரங்களில் வாகனங்களில் வெளியிலும், மலைப்பகுதி, கூட்ட நெரிசலில் அழைத்து செல்ல கூடாது.

பெரும்பாலும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவிட வேண்டும்.

குளிர்ந்த நீர், தயிர், மோர், எலுமிச்சை, அன்னாசி, திராட்சை பழங்களை கொடுக்கக்கூடாது.

பனிக்காலத்தில் சூடான நீரை பருக வேண்டும். அசைவ, கார உணவுகளை உண்ணலாம்.

குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை எதிர்ப்பு சக்தியை உருவாக்கக் கூடிய ப்ளு ஊசி, நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிது கொடுப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்; சளி, இருமல், காய்ச்சல் வருவதை கட்டுப்படுத்தலாம்.