தழும்புகளை மறையச் செய்யும் தண்டுலோதகம்!

அரிசி கழுவிய தண்ணீரை ஆயுர்வேதத்தில் 'தண்டுலோதகம்' என அழைக்கப்படுகிறது.

10 - 20 நிமிடங்கள் மட்டுமே ஊறிய அரிசி தண்ணீரால் முகம், கழுத்தை கழுவும் போது எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

மாறாக, இரண்டு மணி நேரம் அரிசி ஊறிய தண்ணீரை தனியே எடுத்து, ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். இதை, 48 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், ஒரு வித வாசனையுடன் புளித்திருக்கும்.

இந்த நீரில், புதிய செல்கள் உற்பத்திக்கு உதவும் 'இனோசிட்டோல்' என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருக்கும்.

இந்த தண்ணீரால் முகத்தை கழுவும் போது, சரும சுருக்கங்கள் வருவது தாமதமாகும். கொலாஜின் உற்பத்தியையும் அதிகரிப்பதால் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.

முகப்பரு, கரும்புள்ளி, அடிபட்டு நீண்ட நாள் இருக்கும் தழும்புகள் இருந்தால், அந்த இடத்தில் இந்த நீரால் தினமும் கழுவலாம்.

இதன் தீவிரத்தை குறைக்க இது உதவும். தோலில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த நீரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்து தினமும் உபயோகிக்கலாம்.