காசநோய் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?

ஒரு சிலருக்கு அடிக்கடி தொடர் இருமல் ஏற்படும் போது, காசநோய் பாதிப்பாக இருக்கக்கூடுமோ என அச்சமடைவர்.

ஆனால், தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டால் காசநோய் என ஒருபோதும் நம்பிவிட வேண்டாம்.

காசநோய் பாதிப்பை கண்டறிய அறிகுறிகள் உள்ளன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் சிகிச்சை அளித்து காப்பாற்றிடலாம்.

இதன் அறிகுறிகளாக தொடர் இருமல் பாதிப்பு ஏற்படுதல், மாலையில் காய்ச்சல் ஏற்பட்டு, பின் விட்டு விட்டு பாதிப்பு தெரிவது, சளியில் ரத்தம் வருதல் அறிகுறிகளாகும்.

மேலும், உடல் எடை குறைதல், பசியின்மை உள்ளிட்டவையும் அறிகுறிகளாகும்.

எனவே, தொடர் இருமல் பாதிப்பை மட்டுமே வைத்து காசநோய் என தீர்மானிக்க கூடாது.

உடனடியாக எக்ஸ்ரே, சளி பரிசோதனை செய்து, மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியமானது.